
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் சாணார்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஜெயலட்சுமி, ரோஜாபேகம், உமர்தீன் ஆகிய 3 பேர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை தொடர்ந்து அந்த கடைகளில் இருந்து 32 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கும் சீல் வைத்தனர்