
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து மின் தடை குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தும் அவ்வப்போது இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்தது.
இதுகுறித்து மின்சாரவாரியத்தினர் இந்த பகுதியில் நடத்திய சோதனையில் கவுஞ்சியை சேர்ந்த தில்லைநாயகம் மகன் கதிரவன்(38) என்பவர் இரவு நேரத்தில் மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியதும், அதேபோல இது பற்றி இந்த பகுதியில் பணியாற்றும் மின்சார வாரிய பணியாளரை மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் குமார் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை கைது செய்தனர்.