
பள்ளிக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பெட்டாஸ் கூரை வேண்டாம் – குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவிப்பு
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர பலமுறை கோரிக்கை விடுத்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதிகாரிகள் ஆஸ்பெட்டாஸ் சீட்டு மட்டுமே மாற்றி த் தர முடியும் என்று வாகனத்தில் கொண்டு வந்து இறக்கும் பொழுது பொதுமக்கள் எங்களுக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பட்டாஸ் வேண்டாம் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார்கள். இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் இன்று முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்