
நத்தம் அருகே சாக்கு பையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது, ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், சிறுகுடி ரோடு கோட்டையூர் பேருந்து நிறுத்தம் அருகே சாக்குப் பையில் வைத்து அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த கோட்டையூரை சேர்ந்த அழகன் மகன் முருகேசன்(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்