
குஜிலியம்பாறை அருகே ரயில்வே சுரங்கப்பாதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி தொய்வினால் பலியாகும் உயிர்கள்..
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தங்கச்சியம்மாபட்டி ரயில்வே சுரங்கப்பாதை பணி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாக இன்றுவரை பணி முடிக்காமல் தொய்வுடன் நடைபெற்று வருகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற நிலையில்
இருசக்கர வாகனத்தில் சென்ற நத்தபட்டியை சேர்ந்த மதியழகன் சுரங்கப்பாதைக்காக அமைக்கப்பட்ட மணல்மேட்டில் பறந்து சென்று கீழே விழும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
உடனடியாக இந்தப் பணியினை முடித்து மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது..