
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகையை மர்ம நபர் கொள்ளையடித்தது தொடர்பாக ஆயக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட போதைராஜா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 பவுன் தங்க நகை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதைராஜா மீது ஆயக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது