
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அண்ணா பல்கலை கழகம் அருகே இன்று அதிகாலை சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குடல் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானது.
ரோந்து காவலர் ஒருவர் இறந்த புள்ளிமானை பார்த்ததால் சம்பந்தபட்ட வனம் சார்ந்த துறை அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் வர கால தாமதம் ஆகி வருவதால் இறந்த மானை வேறு விலங்குகள் சாப்பிடாமல் இருக்கவும் , கறிக்காக யாரும் தூக்கி சென்றுவிடாமல் இருக்கவும் தொடர்ந்து காவல்துறையினர் அவ்விடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.