
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27) இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ஆட்டோவில் ஏறினர். முத்தழகுபட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்று கொண்டிருக்கிற போது 3 பேரும் ஆட்டோவை நிறுத்த சொல்லி கீழே இறங்கி கத்தியை காட்டி மிரட்டி தாக்கி செல்லத்துரையிடமிருந்து ரூ.8000 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்
இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட காமராஜபுரத்தை சேர்ந்த குமார்(25) ராஜபாண்டி(37) முத்தழகுபட்டியை சேர்ந்த அருண்குமார்(35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்