
நாகர்கோவில் பால்பண்ணை ஜங்சன் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்
நாகர்கோவில் பால்பண்ணை அருகே இன்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்ஸும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தின் போது ஆம்புலன்ஸ் மிகைவேகத்தில் நோயாளியை கொண்டு சென்று கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்த உடனேயே போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.