
திண்டுக்கல் மாவட்ட வனபாதுகாப்பு படையினர் சிறுமலை மலை பகுதிக்கு ரோந்து சென்ற போது 9-வது கொண்டை ஊசி வளைவில் அநாதையாக இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை பார்த்துள்ளனர். அப்பகுதி முழுவதும் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடு ஆகும்.
எனவே அருகில் உள்ள இடங்களில் சோதனை செய்த போது முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் அவனை விட வயது குறைந்த சிறுமியுடன் உ**சமாக இருந்ததை கண்டு இருவரையும் சிறுமலை வன சோதனை சாவடிக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுவனின் செல்போனை சோதனை செய்ததில் அவனது நண்பன் ஒருவன் காட்டு முயலை பிடித்த நிலையில் புகைப்படம் இருப்பதை கண்டு அது குறித்து விசாரித்துள்ளனர்.
காட்டுமுயலை கையில் வைத்து புகைப்படம் – ஒரு சிறுவனை பிடித்து வனத்துறையினர் விசாரணை

இச்சிறுவனின் நண்பன் காட்டு முயலுடன் புகைப்படம் எடுக்க சொன்னதால் தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறியுள்ளான். அதனை தொடர்ந்து இரு சிறுவர்களுக்கும் காட்டு முயலை வைத்திருந்த குற்றத்திற்காக ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல்
பெற்றோருக்கு தெரியாமல் வனப்பகுதிக்குள் உ**சமாக இருந்த சிறுவர் சிறுமியர் குறித்தும் எந்த விதமான விசாரணை மேற்கொண்டார்கள் என்பதும் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் சிறுமலை வன சோதனை சாவடியை எப்படி இவர்கள் கடந்து சென்றனர் என்றும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு