
நேற்று (01.8.2025) இரவு -10.30 மணியளவில் பழனி Rf ரோடு ஈஸ்வரன் உணவகம் அருகே அனல் பறக்கும் இரவு நேர மதுபானம் விற்பனை இதை பழனி நகர காவல் துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கலால்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..??

பழனியில் உணவகங்களை மூட சொல்லும் அதிகாரிகள் இரவு நேர டாஸ்மாக் கடையில் மது விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளதா ..?? இது தினந்தோறும் தொடர்ந்து நடைபெறுகிறது .
கண்துடைப்பாக இரவு..10மணிக்கு மேல் பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகள் வந்து ஒரு புகைப்படத்தை எடுத்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்றும் பழனியில் நடக்கும் இரவ நேரம் செயல்படும் மதுபான விற்பனையை மறைத்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்றும் இதற்கு அனைத்து புகைப்படங்கள் வீடியோ பதிவுகள் உள்ளன,, மற்றும் இரவு நேரம் செயல்படும் டாஸ்மாக் கடையிலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்ட CCTV கேமராவிலும் வேல் ரவுண்டானா பகுதியில் உள்ள ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு அது தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் மதுவிலக்கு துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையுடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன