
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா அரசு நிகழ்ச்சியில், திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், தேனி எம்எல்ஏ மகாராஜனுக்கும் இடையே மேடையேறிய மோதல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வரவேற்பு பேனரில் மகாராஜனின் புகைப்படம் இடம் பெறாததால், நிகழ்ச்சி தொடக்கத்திலேயே சலசலப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் நலத்திட்ட உதவிகளுக்கான அடையாள அட்டையை மகாராஜனிடம் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் பிடுங்கிச் சென்றதால், இருவருக்கும் இடையே கூச்சலிடும் அளவுக்கு வாக்குவாதம் உருவாகியது. அரசு விழா மேடையில் நிகழ்ந்த இந்த மோதல், திமுக வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது