
திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில் கோவில் திருவிழாவில் நந்தகோபால் என்பவர் மகன் ஸ்ரீதரன்(2) சமையல் செய்யப்பட்ட இடத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் மீது ஏரி உட்கார்ந்த போது அந்த சூடான பாத்திரத்தின் மூடி நழுவியதால் எதிர்பாராத விதமாக சூடான ரசத்தில் விழுந்தான்.
உறவினர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்ரீதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்