
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு கோட்டைபட்டி தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தென்பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது சின்டெக்ஸ் மற்றும் அதை தாங்கும் சிமெண்ட் தளமும் பழுதாகி பல மாதம் ஆகிறது அதேபோல் குழாயில் மட்டுமல்ல சின்டெக்ஸ் டேங்க் அடிப்பகுதியும் உடைந்து சிமெண்ட் தளம் பெயர்ந்து அதன் வழியாகவும் தண்ணீர் வருகிறது ஊராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை தகவல் அளித்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டும் காணாமல் அப்படியே விட்டுவிட்டனர்தினந்தோறும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாகவும் டேங்க் திடீரென இடிந்து விழுந்தால் தண்ணீர் எடுக்க செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம்.