
பழனி அருகே கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி மாட்டியதால் ஆத்திரம் – வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – S.P. நடவடிக்கை எடுப்பாரா சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திண்டுக்கல் பழனியில் அடுத்த பெருமாள் புதூரை சேர்ந்த மூர்த்தி, அப்பகுதியில் மது மற்றும் கஞ்சா போதையில் இளைஞர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மூர்த்தி தனது வீட்டின் முன்பு CCTV கேமரா பொருத்தினார். இந்நிலையில் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்யும் நிர்மல்குமார் என்பவருக்கு CCTV கேமராவால் கஞ்சா விற்பனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது அகற்ற சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கஞ்சா வியாபாரி நிர்மல்குமார், மூர்த்தி வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்திய இடத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர்