
தமிழகத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உள்ளூர் மக்கள் நாய்களிடம் கடி வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யாமல் அவற்றை அங்கிகாரம் பெறாத தனியார் தொண்டு நிறுவனங்களுடன் உள்ளாட்சி அமைப்புகள் இடமாற்றம் செய்து விட்டு குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்து அதே இடத்தில் மீண்டும் விட்டதாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளதாக தொடர்ந்து இந்திய விலங்குகள் நலவாரியத்திற்கு புகார்கள் வந்தனை தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில் விலங்குகளுக்கான குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சை விதிகள் குறித்தும் அதை கட்டாயம் நடைமுறைபடுத்திட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றியும் அதன் முக்கிய அம்சமாக மாதாந்திர கண்காணிப்பு குழு கூட்டம் , அறுவை சிகிச்சை கூடம் மற்றும் விலங்குகளை அடைத்து வைக்கும் வளாகம் முழுவதும் CCTV கேமராக்கள் பொருத்துவது உட்பட பல்வேறு விதிமுறைகளை தெளிவாக குறிப்பிட்டு உடனடியாக அதற்குண்டான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.