
திண்டுக்கல் வத்தலகுண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி(29) இவர் உடல்நலம் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் மாமனார் ராமன் மாமியார் கருப்பாயி ஆகியோருடன் மலைச்சாமி தம்பி ஜெயராம் ஆட்டோவில் செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ஜெயராம்,ராமன், கருப்பாயி ஆகிய 3 படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
மேற்படி சம்பவம் குறித்து சம்பட்டி போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்