
ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசாருக்கு ஒரு அழைப்பு வருது. எதிர்முனையில எம்.எல்.ஏ. மகேந்திரன் பேசறதாகவும், தன்னோட தென்னந்தோப்புல வேல செய்யறவங்களுக்குள்ள ஏதோ தகராறுன்னு சொல்லி இருக்காரு.
இத கேட்ட சார்பு ஆய்வாளர் சரவணக்குமார், அப்போ ரோந்து பணியில இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலையும், அவருடன் இருந்த காவலர் அழகுராஜாவையும் சம்பவ இடத்துக்கு போயி அங்கு என்ன நடந்ததுன்னு விசாரிக்க சொல்லி இருக்காரு. உடனே அழகுராஜாவும், சண்முகவேலும் சம்பவ இடத்துக்கு போயிருக்காங்க.
நைட் இருட்டான அந்த தென்னந்தோப்புல வயசான ஒருத்தர் தலையில இருந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்துக்காரு. அத பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், என்ன ஆச்சு, யாரு உன்ன வெட்டதுன்னு விசாரிச்சி இருக்காரு. அப்போது அந்த வயதான நபர் பேரு மூர்த்தின்னும், அவரை அவரே வெட்டிக்கிட்டாருன்னும் அங்க இருந்த மூர்த்தியோட மனைவி சொல்லி இருக்காங்க. இத கேட்ட சண்முகவேல், அது எப்படி அவரே அவரை வெட்டிக்க முடியும்ன்னு தன்னோட கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தி இருக்காரு.
அப்போ மூர்த்திக்கும் அவரோட மகன்களான மணிகண்டன் மற்றும் தங்கப்பாண்டிக்கும் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், அதுல ஆத்திரமான மகன்கள் ரெண்டு பேரும் மூர்த்திய வெட்டிட்டதும் தெரிய வந்து இருக்கு. இத சண்முகவேல் விசாரிச்சிட்டு இருக்கும்போதே, தென்னந்தோப்புல மறைஞ்சி இருந்த மணிகண்டனும், தங்கப்பாண்டியனும் ஓடி வந்து இருக்காங்க.
உன்ன யாருடா உள்ள விட்டது.. நீ எதுக்குடா எங்க பிரச்சனையில வரன்னு சொல்லி ஆபாசமாக திட்டி சண்முகவேல வெட்ட அரிவாளை ஓங்கி இருக்காங்க. அத பார்த்து பயந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலும், காவலர் அழகுராஜாவும் அலறியடித்து ஓடி இருக்காங்க. அழகுராஜா ஓடி போயி தப்பிச்சதும், சண்முகவேலோட கழுத்த மணிகண்டனின் கையில இருந்த அரிவாள் பதம்பார்த்து இருக்கு. அப்போ அங்க நின்றிருந்த மூர்த்தி , ”எங்க பிரச்சனைக்கு நடுவுல உன்ன யாருடா வர சொன்னது, வெட்டுங்கடா அவனன்னு சொல்லி தன் மகன்கள உசுப்பேத்தி இருக்காரு. கழுத்து நரம்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சண்முகவேல் முகத்தை வெட்டி சிதைச்சி இருக்காங்க.
துடிதுடிக்க ஆட்டை கழுத்தறுப்பதை போல ஒரு காவல்த்துறை அதிகாரியை கழுத்தறுத்து கொலை பண்ணி இருக்காங்க. இது எல்லாம் நள்ளிரவு 1 மணிக்குள்ள அரங்கேறி இருக்கு. இந்த படுகொலைய பார்த்து தப்பிச்சி ஓடிய காவலர் அழகுராஜா போலீஸ்க்கு தகவல் கொடுக்கறாரு. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சண்முகவேல் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சி இருக்காங்க. இதற்குள்ள கொலை செஞ்சிட்டு தப்பிச்சி போன 3பேரையும் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.
நள்ளிரவுல நடந்த இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என கண்டனங்களை தெரிவித்தனர். ஒரு பக்கம் குற்றவாளிகளை போலீசார் தேடி வரும்போதே மறுபக்கம் அவர்களை பழித்தீர்ப்பதற்காக காவல்துறை வெறிக்கொண்டு காய்களை நகர்த்தியது.
அப்போதுதான், நேற்று நள்ளிரவு ஆள் அரவம் இல்லாத நேரத்துல போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆட்டோ ஒன்னு வந்து நிக்குது. அதுல இருந்து இறங்கிய 3பேர பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மூர்த்தி, தங்க பாண்டியன் மற்றும் அழகுராஜா குறிப்பிட்ட காவல்நிலையத்துல சரணடைஞ்சி இருக்காங்க.
உடனே 3பேரையும் உள்ளே போய் விசாரிச்ச போலீசாருக்கு, மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக சீக்ரெட் ஆப்ரேஷன நடத்த மேல் இடத்துல இருந்து உத்தரவு வந்து இருக்கு.
உடனே அவசர அவசரமாக புல்லட்டுகளை துப்பாக்கில லோடு செஞ்ச போலீசார் தங்களோட சீக்ரெட் ஆப்ரேஷனை சக்சஸ் செய்ய புறப்பட்டனர். சரணடைந்த 3பேர்ல மணிகண்டன்கிட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல வெட்டன அரிவாள் எங்க இருக்குன்னு கேட்டு இருக்காங்க. அது உப்பாறு அணை ஓடை பக்கத்துல இருக்கறதா சொன்னதால, அங்க மணிகண்டன அழைச்சிட்டு உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் போயிருக்காங்க. அடுத்த சில மணி நேரங்களில் போலீசார் அரங்கேற்றிய அந்த சீக்ரெட் ஆப்ரேஷன்ல வேகமாக பறந்த புல்லட் காத மட்டுமில்லாம மணிகண்டனோட உடலையும் துளைச்சி இருக்கு.
சீக்ரெட் ஆப்ரேஷனுக்கு பிறகு சுமார் 6 மணி நேரங்களில் தங்கள் கடமையாற்றிய ஆவணங்களை போலீசார் சரிசெஞ்சி இருக்காங்க. இதுக்கு இடையே இந்த தகவல் வெளியே கசியாமல் இருக்க குறிப்பா காலை 6 மணி வரை மீடியாவுக்கு தெரியாம பார்த்து இருக்காங்க. அதன்பிறகே மணிகண்டனை என்கவுணர் செய்தது எல்லாருக்கும் தெரிய வந்து இருக்கு.
காவல் பணிக்காக தனது கடமையை ஆற்ற சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை மனிதாபிமானமே இல்லாமல் அரக்கத்தனமாக கொல்லப்பட்டதுக்கு பழித்தீர்க்கும் விதமா நடந்த இந்த என்கவுண்டரை பொதுமக்களும், காவல்துறையும் வரவேற்றாலும், நாளை மெல்ல மெல்ல மனித உரிமை பற்றி பேசும் நல்ல உள்ளங்கள் போர்க்கொடி தூக்க இது ஒரு வாய்ப்பாகவும் ஆகிவிட்டது.
ஒரு போலீஸ் உயிருக்கு இன்னொரு உயிர் தான் வேணும்ன்ற அளவுக்கு என்கவுண்டர் செஞ்ச காவல்துறை, திருப்புவனம் அஜித்குமார் வழக்குல உயிருக்கு உயிர் என்ற நீதியை ஏன் நிலைநாட்டவில்லை என்ற கேள்வியும் எழுந்து இருக்கு….