
புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விவசாய பணிக்கு சென்ற மூன்று பேரை கரடி கடித்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அருகே விவசாயிகளுக்கு ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை விளைநிலத்திற்கு விவசாயம் பணி செய்வதற்காக சென்ற நிலையில் மூன்று பேரை அங்கு இருந்த கரடி கடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உதவியோடு மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு வனவிலங்குகள் விளைநிலத்திற்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புளியங்குடி பணிமனை அருகே உள்ள கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர், வனத்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.