
நல்ல பாம்பு வயிற்றிலிருந்து கக்கப்பட்ட 7 முட்டையில் இருந்து ஆய்வு செய்ய போது பாம்பு முட்டையில் இருந்து வந்த கௌதாரி (Francolin)எனப்படும் பறவையின் முட்டைகள் தெரியவந்தது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்பகுதியில்
கடந்த 27.07.2025 அன்று இரவு மணி அளவில் மகிழ்ச்சி நகர் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்ததாக வனத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் இளங்கோ அவர்களின் உத்தரவின் பேரில்
வனச்சரக அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் வனவர் மகாராஜன் மற்றும் அதி விரைவு மீட்புக்குழுவினர்(RRT)முருகன் மற்றும் வசந்த் ஆகியோர் விரைந்து சென்று .
வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பினை பிடிக்க முயன்ற போது அதன் வயிற்றில் இருந்து 7 முட்டைகளை கக்கியது.
பின்னர் வனத்துறையினர் பாம்புடன் சேர்த்து அது கக்கிய முட்டைகளையும் மீட்டு வனக்கால்நடை அலுவலர் மரு.மனோகரன் ,வனக்கால்நடை உதவி மருத்துவர் சாந்தகுமார் மற்றும் வனக்கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் அடங்கிய வனக்கால்நடை மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தனர் .
முட்டைகளை பரிசோதித்த மருத்துவக்குழுவினர் அது பாம்பு முட்டை இல்லை எனவும் கௌதாரி (Francolin)எனப்படும் பறவையின் முட்டைகள் எனவும் தெரிவித்தனர்.
எனினும் அதன் முட்டைகளை incubator ல் வைத்து பொரிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று அதாவாது 06.08.2025 அன்று முட்டைகளில் இருந்து கெளதாரிக்குஞ்சுகள் வெளியில் வந்தன.
பாம்பின் வாயிலிருந்து கக்கிய முட்டைகளை பொரித்தது எப்படி சாத்தியம் எனக்கேட்டபோது.
இது குறித்து வனக்கால்நடை அலுவலர் Dr. மனோகரன் அவர்கள் கூறும்போது பொதுவாக நல்ல பாம்பு முட்டைகளை கக்கிய பின்பும் முட்டைகள் பிளவடையாமல்,வெப்பத்தால் பாதிக்கப்படாமல்,முட்டையின் உட்புற வளர்ச்சி பாதிக்கப்படாமல்,முழுங்கிய முட்டைகள் ஒரு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டால் இது சாத்தியம் எனவும், கெளதாரிகள் 6 முதல் 14 முட்டைகள் வரை இடும் என்றும் அதன் அடை காக்கும் காலம் 18 முதல் 21 வரை ஆகும் அதன் படி பார்த்தல் அந்த முட்டைகள் ஏற்கனவே தாய் கெளதாரி 11 நாட்கள் அடை காத்திருக்கும் பட்சத்தில் அதன் கரு(embryo)வளர்ந்து முட்டைகள் பொரிக்க சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார்.
பாம்பு கக்கிய முட்டைகளை பொரிக்க வைத்து சாதனை செய்த வனக்கால்நடை மருத்துவக் குழுவினரை மாவட்ட வன அலுவலர் இளங்கோ மற்றும் வனத்துறையினர் வெகுவாக பாராட்டினர்.