
‘திருப்பூர்’ என்கவுண்ட்டரில் பலியான ‘திண்டுக்கல்’ மணிகண்டன்- ஊருக்குள் ‘உடலை’ அனுமதிக்க மறுத்த உறவினர்கள் – திருப்பூரில் உடல் அடக்கம்
திருப்பூர் உடுமலைப்பேட்டை குடிமங்கலம், SSI.சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்ட மணிகண்டன், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணிகண்டன் உடலை சொந்த ஊரான, திண்டுக்கல் நாயக்கனூர் கிராமத்துக்குள் அனுமதிக்க அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிகண்டன் உடலை நாயக்கனூருக்கு கொண்டு செல்ல அவரது தாயார் ஏற்பாடுகள் செய்தார். ஆனால் நாயக்கனூர் பொதுமக்களோ, மணிகண்டன் உடலை ஊருக்குள் அனுமதிக்க முடியாது; அப்படியே ஊருக்கு வெளியே உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்துவிட வேண்டும் என முதலில் கூறினர்.
பின்னர் நாயக்கனூர் ஊர் மக்கள் ஒன்று கூடி, மணிகண்டன் உடல் வந்து சேர நள்ளிரவு ஆகிவிடும்.. அதனால் ஊர்க்காரர்கள் சிலர் திருப்பூர் சென்று அங்கே மயானத்தில் மணிகண்டன் உடலை அடக்கம் செய்துவிடலாம் என முடிவெடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் உடல் திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது