
வடமதுரை அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளபொம்மன் பட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த ரவிக்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்