
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் சுகாதார சீர்கேடு ஏற்பாடுவதால் புகார் எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் மெய்வாலிபட்டியிலிருந்து மைலாப்புரம் செல்லும் நெடுஞ்சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயை கடந்த சில நாட்களாக தூர்வாராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொசுக்களும் புழுக்களும் பெருகி வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுகிறது; அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் என கூறும் பொதுமக்கள் தேங்கிநிற்கும் கழிவுநீர் அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மெய்வாலிபட்டி பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.