
நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம்,அருணாசலபுரம்,பாம்பு கோவில்சந்தை,புளியங்குடி உள்ளிட்ட பகுதியில் பிச்சிபூ, கனகாம்பரம் பூ, அரளி பூ, மல்லிகை பூ உள்ளிட்ட பல்வேறு பூச்செடிகள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடையநல்லூர் பகுதியில் பூச்செடிகள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பூக்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த பகுதியில் தற்போது சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக விளைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
காலை 6 மணிக்கே பூக்கள் பறிக்க தோட்டத்திற்கு விவசாயிகள் சென்று விடுகின்றனர். 11 மணி வரைக்கும் பூக்கள் பறிக்கின்றனர். ஒவ்வொரு விவசாயிகளுக்கு பூக்கள் விளைச்சல் குறைந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் அதி காலையில் பூப்பறிக்க ஏன் செல்கிறார்கள் என்றால் வெயில் தாக்கம் இருப்பதால் பூக்கள் பறிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால் அதிகாலையில் பூப்பறிக்க சென்று விடுகின்றனர் .மேலும் கடந்த சில நாட்களாக பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்த நிலையில் இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நாளை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பல்வேறு பகவான் கிருஷ்ணர் கோயில்களில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்களின் விலை கனிசமாக உயர்ந்துள்ளது . பிச்சிபூ ரூபாய் 1000 , கனகாம்பரம் பூ ரூபாய் 900, மல்லிகை பூ கிலோ ரூபாய் 1000 அரளி பூ, கேந்தி பூ உள்ளிட்டவைகளும் கனிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.