
79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார், அதனைத் தொடர்ந்து சமாதான புறாக்கள் மூவண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, கோட்ட களத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் மூலம் 298 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி 17 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார், அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.