
அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற 79 -வது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 79 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவர்ண கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, மூவர்ண கொடியில் பச்சை நிறம் மேலே இருந்தவாறு கொடி ஏற்றப்பட்டது. உடனடியாக இதை கவனித்த அதிகாரிகள் மற்றும் அம்பை ஒன்றிய சேர்மன் பரணி சேகர் அவசர அவசரமாக கொடியை கீழே இறக்கினர். தவறை சரிசெய்து மீண்டும் ஏற்றினர்.
தலைகீழாக தேசிய கொடியை ஏற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.