
குமரி, கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி வனத்துறை அதிகாரிகள் குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் மோதிரமலையைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் விஷம்பரன், குட்டப்பன், நாகப்பன் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து புலிப்பல், யானை தந்தங்களும் பறிமுதல் செய்தனர்.