
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பு சட்டப்படி போர்வெல், கம்ப்ரசர், பொக்லைன், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது.
சமீபத்தில் தான் கோட்டாட்சியர் அனைத்து வகை தடை செய்யப்பட்ட இயந்திர வாகனங்களை மலையை விட்டு கீழே உடனடியாக இறக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தார் . அவரது உத்தரவை மீறியும் கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு தாராளமாக நடந்தேறி வருகின்றன.
வருவாய்த்துறையினர் , வனத்துறையினர் , கனிம வள துறையினர் மற்றும் தொடர்புடைய எந்த துறையிலிடும் கண்டு கொள்ளவதே இல்லை. இதனால் கொடைக்கானல் மலை அடிவார சோதான சாவடிகள் மற்றும் பெருமாள் மலை வனத்துறை சோதனை சாவடி உட்பட காவல் , வன துறைகளின் அத்தனை சோதனை சாவடிகளையும் கடந்து தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ் மலை பகுதிகளிலும் தாராள பயன்பாட்டிற்கு வந்து கோட்டாட்சியரின் உத்தரவு செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள வருவாய்த்துறையினர் , வனத்துறையினர் , கனிம வள துறையினர் மற்றும் தொடர்புடைய இதர துறையினர் மீதும் கலெக்டர் சரவணன் சாட்டையை சுழற்றி நடவடிக்கையை தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்