
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் – மோகனூர் சாலையில் காவேரி ஆற்று கரை ஓரத்தில் உள்ளது அனிச்சம்பாளையம் கிராமம்.

இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சில ஆமைகளை பிடித்து காவேரி ஆற்று கரையில் அமர்ந்து நெருப்பில் சுட்டு சமைத்து கொண்டிருந்ததை அந்த வழியாக வந்த ஒருவர் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.
அந்த வீடியோவை கண்ட வன ஆர்வலர்கள் தமிழக வனத்துறையின் தலைமை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் சம்மந்தபட்ட குற்றவாளிகள் இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு ரூபாய் ஐம்பது ஆயிரம் அபராதம் விதித்தனர்.