
கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட கல் விற்பனை செய்வதாக வந்த தகவல் பெயரில் போலீசார் சோதனை செய்து வந்தனர். அவ்வழியாக வந்த இரு பெண்கள் தங்களது பைகளில் கல் வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், போலீசார் பைகளை சோதனை செய்ய கேட்டபோது இரு பெண்களும் நாங்கள் வியாபாரம் செய்யவில்லை கடவுளுக்கு படைத்து சாமி கும்பிடவே எடுத்து வந்தோம் எனக் கூறி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மேலும் பைகளை தர மறுத்து ரகளையில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.