
உங்கள் கையில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது – உயர்கல்வி படிப்புகளை படித்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் – அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அறிவுரை
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையாவிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு கல்லூரியில் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டார கிராமத்தில் வசித்து வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையாவை நேரில் சந்தித்து தமிழக முதல்வருக்கும் அவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
அப்போது எம். எல். ஏ சண்முகையா மாணவர்களிடம் பேசுகையில், பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது, தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி நன்றாக இருக்கிறதா? ஆசிரியர்கள் படிப்பு எப்படி சொல்லிக் கொடுக்கிறார்கள்? நன்றாக படிக்க வேண்டும் உங்கள் கையில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது. படித்து நீதிபதி, ஐ. ஏ. எஸ், ஐ. பி.எஸ், ஐ .ஆர் .எஸ் உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படித்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும், செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் மாணவர்கள் விளையாடக்கூடாது, மற்ற மாணவர்களை விளையாட விடாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு என்ன குறைகள் இருக்கிறது. மாணவர்கள் கூறுகையில் தங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு உபகரணங்கள் இல்லை, கபடி போட்டி விளையாட்டு மைதானம் இல்லை ஓட்டப்பிடாரத்திலிருந்து தட்டப்பாறை செல்லக்கூடிய வழித்தடங்களில் கூடுதலாக பேருந்து வசதி வேண்டும், தமிழகத்தில் செல்போனில் ‘பிரீ’ பையர்’ என்ற கேம் தடை செய்ய வேண்டும், என்று பல்வேறு கோரிக்கைகளை கல்லூரி மாணவர்கள் முன் வைத்தனர்.
‘ஃப்ரீ ஃபயர்’ என்ற கேமை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்காமல் நன்றாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மாணவர்களுக்கு உடற்பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு ரூபாய் 10,000 வழங்கினார்.