
திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது குடகிபட்டியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முருகன்(52) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் ரூ.4,700 பணம் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.