
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மகேஷ் என்பவர் மகள் பிரித்திகா ஸ்ரீ, இந்த சிறுமி அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 -ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி பிரித்திகா ஸ்ரீ தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் சிறுமி பிரித்திகா ஸ்ரீயை தாக்கியது. குறிப்பாக சிறுமியின் வாய், மூக்கு என முகத்தில் பயங்கரமாக கடித்து குதறியது.
உடனடியாக நாய் துரத்திய அப்பகுதியினர் சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர், தொடர்ந்து சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அம்பை அருகே தெரு நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.