
திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே செயல்பட்டு வரும் பிரபல பால் நிறுவனத்தில்(ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு சொந்தமானது)தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்துரத்தினவேல் மற்றும் சங்கால்பட்டியை சேர்ந்த முனிசெல்வம் உள்ளிட்ட 10 பேர், தங்களது கட்சியின் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது மாநாட்டுக்காக ரூ.5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பால் நிறுவனத்தின் கிளை மேலாளர் ரஞ்சித்யாதவ் வடமதுரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முத்துரத்தினவேல், முனிசெல்வம் உள்ளிட்ட 10 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்