
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கணேசபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது தோட்டத்தில் பெண் யானை திடீரென மயங்கி விழுந்தது. அதன் அருகில் நின்ற குட்டி ஆண் யானை செய்வதறியாது அங்கும், இங்கும் அலைந்து பாசப் போராட்டம் நடத்தியது. வனத்துறையினர் மயங்கி விழுந்த யானையை நெருங்க முயன்ற போது குட்டி யானை நெருங்கவிடாமல் முட்டுவது போல் மிரட்டியது. ஒரு வழியாக குட்டியானையை பிரித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட பெண் யானைக்கு ஆண்டிபயாட்டிக் மயக்க மருந்துகள், குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டன தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.