
கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்திய தேர்தல் ஆணையம் நிர்வாக சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறியும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதாக கூறியும், அதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டத்தின் சார்பில், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். இதில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.