
சாம்பவர்வடகரையில் புதிதாக தொடங்கப்பட்ட நியூ தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று ஆஃபரில் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்துள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இன்று ’நியூ தலப்பாக்கட்டு பிரியாணி’ கடை திறப்பு விழா நடைபெற்றது. கடை திறந்த சிறிது நேரத்தில், இரண்டு பிரியாணி வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று ஆஃபர் வெளிவந்தவுடன் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அந்த கடையில் குவிந்தனர்.
இந்த நிலையில் போட்டி போட்டு பிரியாணிகளை வாங்கி சென்றனர். மேலும் இரண்டு நாட்கள் இந்த ஆஃபர் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும், ஒரு மணி நேரத்தில் பிரியாணி விற்று தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.