
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்ற பல்வேறு கோணங்களில் கலசபாக்கம் போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேவனாம்பட்டு கருந்துவாம்பாடி இடையேயுள்ள வனப்பகுதியின் சாலையில் இருந்து 30 அடி தொலைவில், சுமார் 30 வயது மதிக்கதக்க ஆண் நபரின் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த கலசப்பாக்கம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், கைரேகை நிபுணர்கள் மற்றும் தடையவியல் துறை நிபுணர்கள் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.