
அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனுதினமும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதன் பின்னர் மனம் உருகி அண்ணாமலையார் கோவில் விழுந்து கும்பிட்ட நடிகர் விக்ரம் பிரபு வழிபட்டார்
மேலும் கோயிலுக்கு வந்த நடிகர் விக்ரம் பிரபு ரசிகர்கள் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.