
திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பொதுமக்களுக்கான பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசு வழங்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்க ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் மத்திய அரசால் வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் வழங்கப்படும் பச்சரிசி , கோதுமை , சக்கரை , பருப்பு , பாமாயில் , டீ தூள் உட்பட தனியார் நிறுவனங்களின் பாலீத்தின் கவர்களில் அடைக்கப்பட்ட சேமியா , உளுந்தம் பருப்பு உட்பட பல பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் மத்திய அரசின் இலவச அரிசி குடும்ப அட்டையை பொருத்து அளவு மாறுபட்டு வழங்கப்படும் . இதில் பல்வேறு ரேசன் கடைகளில் அளவு குறைத்து மற்றும் சில கடைகளில் கை அளவை மூலம் அரிசி வழங்குகின்றனர் .
மேலும் மத்திய மாநில அரசுகள் மானிய விலையில் வழங்கும் கோதுமை மற்றும் பச்சரிசி பெரும்பாலான குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுவது கிடையாது . அப்படியே வழங்கப்பட்டாலும் ஏதாவது ஒன்று மட்டுமே வழங்கப்படும் . பருப்பு , சீனி எடை குறைந்து தான் இருக்கும்.
இது குறித்து ரேசன் கடை பணியாளர்களிடம் கேள்வி எழுப்பும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வந்த அளவு குறைவு என்றும் முழு இருப்பு வரவில்லை என்றும் மழுப்பலான காரணம் கூறி அந்த மாத கணக்கை முடித்து விடுகின்றனர்.
இது போன்று ஒவ்வொரு குடும்ப அட்டை கணக்கிலும் காட்டப்பட்டு ஆனால் வழங்கப்படாமல் ஒதுக்கப்படும் அனைத்து மானிய பொருட்களும் கள்ளச்சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர்.
அவ்வபோது காவல்துறை , உணவு பாதுகாப்பு துறை மற்றும் இதர தொடர்புடைய தனிப்படையினர் கடத்தல் காரர்களை கண்காணித்து கடத்தும் போது கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தாலும் ரேசன் பொருட்கள் கடத்தல் குறைவதாக இல்லை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு மாதம் கூட அவர்களுக்குறிய பொருட்கள் முழுவதும் கிடைப்பதும் இல்லை .
இது குறித்து நன்கு அறிந்த சிலர் கூறுகையில் கடத்தல்காரர்களிடம் பிடிபடும் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வழக்கு பதிவு செய்து விடுகின்றனர் . அதே நேரம் இந்த பொருட்கள் எந்த ரேசன் கடையில் இருந்து கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்வதும் இல்லை அது குறித்த விவரக்குறிப்புகளை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதும் இல்லை . இதனால் கடத்தல் காரர்களுக்கு மானிய உணவு பொருள்களை வழங்கும் ரேசன் கடை ஊழியர்கள் தொடர்ந்து இந்த சட்டவிரோத கடத்தல் கும்பல்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவேண்டிய மானிய உணவு பொருள்களை வழங்குகின்றனர்.
சமீபத்தில் கூட ரேசன் அரிசியை பன்றிக்கு உணவாக கொடுக்க சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இவற்றை கண்காணிக்க வேண்டிய மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அதிகாரி (DSO ) தலைமையிலான குழுவும் , உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் உரிய கண்கானிப்பு மற்றும் திடீர் சொதனைகளை ரேசன் கடைகளில் மேற்கொண்டு இருப்பு மற்றும் வழங்கல் பணியில் முறைகேடு நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.