ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி எரிந்து 2 ஆண்டுகளாக எலும்பு கூடாக காட்சியளிக்கும் புளியமரம்.இத்னால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த புளியமரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை சிந்தலக்கட்டை செல்லும் சாலை ஓரத்தில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பலத்த இடி மின்னல் தாக்கி புளிய மரம் தீப்பிடித்து பற்றி எரிந்தது. புளிய மரத்தின் அடி, நடுப்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து வெற்று கூடாக காட்சியளிப்பது மட்டுமின்றி எப்போது வேண்டுமனாலு கீழே விழுந்து விடும் நிலையில் காணப்படுகிறது. இந்த புளி மரம் அமைந்துள்ள சாலை, முக்கியமான சாலை என்பதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி பஸ் பேருந்துகள் அதிக அளவில் செல்லும் சாலை, மேலும் எப்போதும் போக்குவரத்து இருக்கக்கூடிய சாலை என்பதால் மரம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதை அகற்ற வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மரத்தை அகற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, மரம் விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மரத்தை அகற்ற வேண்டும், என்றும் இதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளிடம் பேசிய போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள், கோட்டாட்சியரிடம் வரும், அதற்குப் பிறகு நாங்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று அலட்சியமாக பதில் அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.