
சங்கரன்கோவிலில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி 400 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடிய தேமுதிகவினர்.
தமிழகம் முழுவதும் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேமுதிகவினர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலின் முன்பு கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு வந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் தேமுதிகவினர் அன்னதானம் வழங்கினர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேமுதிக மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆயூப்கான், செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.