
திருமங்கலம் புதுப்பட்டியில், கருவேலங்காட்டுக்குள் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இது குறித்து விசாரித்தபோது, மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிரேதத்தை போலீசார் கைப்பற்றினர். புகார் அளித்தும் கூட கோவில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் என்ற சூர்யா (24) அவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. கவின் என்ற மூன்று வயது ஆண் குழந்தையும், பிரசாத் என்ற பிறந்து 20 நாளான இன்னொரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நண்பர்களுடன் சேர்ந்து கருவேலங்காட்டுக்குள் மது அருந்தி உள்ளார். அப்போது உடன் இருந்தவர்கள் வெட்டி கொன்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் திருமுருகன் மனைவி பானுமதி வெள்ளிக்கிழமை இரவு திருமுருகனின் இருசக்கர வாகனம் தீ எறிந்த நிலையில் கிடப்பதை பார்த்துவிட்டு கோவில் காவல் நிலையத்தில் தனது கணவனை காணவில்லையென புகார் அளித்தார். அவரை தேடிவந்த நிலையில், காட்டுக்குள் வெட்டி அழுகிய நிலையில் உடல் கிடந்ததை பார்த்து ஆவியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்து பின்னர் திருமங்கலம் ஏ. எஸ். பி. மன்சூர் நகர தலைமையில் காவல்துறையினர் அங்கு வந்து உடலை கைப்பற்றி தற்போது கொலைக்கான பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.