
புளியங்குடி அருகே ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- ஆட்டோவில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு…..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டகுறிச்சி பகுதியை சேர்ந்த சாத்தையா என்பவர் ஆட்டோவில் பயணித்துள்ளார், அப்பொழுது மான் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோ ஓட்டுனர் மான் மீது விட்டவிடக் கூடாது என்பதற்காக ஆட்டோவை திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த சாத்தையா என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு. மேலும் ஆட்டோ ஓட்டுனர் லேசான காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை…..