
பழனி மூலக்கடையில் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பழனி வையாபுரி குளத்தில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிப்பதற்காக மீன்வளத் துறையில் இருந்து மீனவர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். குளத்திற்கு சென்று மீன்களை பார்வையிடுவதற்காக சென்ற போது கந்தன், முருகேஸ் இருவரும் டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த சங்கிலி மகன் தலைமையில் ஐயப்பன், பாலமுருகன், ரிங்கன், வேல்முருகன், தினேஷ்,முத்துக்குமார் மாரிமுத்து,முத்துக்கருப்பன்,சங்கர், ஆண்டாள்,இருளப்பன், சுமார், இருபதிற்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கியதில் இரண்டு பேரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கிய நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.