
சுரண்டை அருகே, கடையாலுருட்டி கிராமத்தில் ஊருக்கு வடக்கே உள்ள செல்லச்சாமி நாடார் விவசாய தோட்டத்தில் உள்ள 60-அடி ஆழமான கிணற்றில் மயில் தத்தளித்த நிலையில், தண்ணீரில் இருந்து பறக்க முடியாத நிலையில் பார்த்த விவசாயி சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த நிலை அலுவலர் ரமேஷ் மற்றும் வீரர்கள் ரவீந்திரன், மாடசாமி, விவேகானந்தன், பொன்ராஜ், செல்வம் ஆகியோர் மயிலை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.