
அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 6 ம் தேதி திண்டுக்கல் வருகையை ஒட்டி, அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி முன்னிலையில் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் பார்சன்ஸ்கோர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மேயர் மருதராஜ், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.