
திண்டுக்கல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை மூடியும் கால்களைக் கட்டியும் ரயிலில் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலைய அதிகாரி உதவியுடன் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்