
நாளை விநாயகர் சதூர்த்தி என்பதால் புளியங்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள மலர் சந்தையில் நாளை விநாயகர் சதூர்த்தி என்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூக்கள் வரத்து குறைவாக இருந்தாலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கும்,வியாபாரிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசித்தி பெற்ற புளியங்குடி மலர் சந்தையில் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூ, கனகாம்பரம் பூ விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் கூறினர் .சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 2000 ரூபாய்க்கும், பிச்சிபூ ஒரு கிலோ 1500 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரளிப்பூ, கேந்தி பூ உள்ளிட்ட இன்னும் பல்வேறு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புளியங்குடி, திருவேட்டநல்லூர், புன்னையாபுரம், பாம்புக்கோவில் சந்தை, அரியநாயகிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பறிக்கப்படும் பூக்கள் இடைத்தரகர்கள் மூலம் புளியங்குடி மலர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. மேலும் கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுகளில் பூக்களை வாங்குவதற்காக ஏராளமானோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாக போதிய அளவு விலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.