
திருநெல்வேலி கே.டி.சி. நகரில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் டாக்டர் மலர் (35) மற்றும் காரில் வந்த நெல்லை டவுணை சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி வருணா(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருநெல்வேலி கே.டி.சி. நகரில் தூத்துக்குடியில் இருந்து கே. டி. சி. நகர் நோக்கி வந்த கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் ரோட்டில் வந்த பெண்மீது மோதி கவிழ்ந்தது. சுரேஷ் மற்றும் அவரது பெண் குழந்தைகள் காயமடைந்தனர். விபத்தில் பல் மருத்துவர் இறந்தது திருநெல்வேலி நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.